மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் ஆர்ப்பாட்டம்
26-Nov-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 76. இவர் கட்டி வரும் புதிய வீட்டின் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பதற்காக தற்போது வசிக்கும் வீட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் பொருத்தப்பட்டுஉள்ள கேமரா உடைக்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியசாமி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார். இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன் 25, சி.சி.டி.வி., கேமராவை கம்பால் அடித்து உடைத்து சேதப்படுத்துவது பதிவாகி இருந்தது.இது குறித்த புகாரில்ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் ஹசன் கேமராவை உடைத்த மோகனை கைது செய்தார்.
26-Nov-2024