உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் கடல் அட்டைபதுக்கியவர் கைது

வீட்டில் கடல் அட்டைபதுக்கியவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வீட்டில் அரியவகை கடல்வாழ்உயிரினமான கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்கள் உட்படஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் அரிய வகையான கடல் பசு, ஆமைகள், கடல் அட்டைகள் பிடிக்க மத்திய அரசுதடை விதித்துள்ளது. இதனை மீறி கடல் அட்டையில் மருத்துவ குணம்உள்ளதாக கருதி வெளி நாடுகளுக்கு கடத்துகின்றனர்.இதனை கண்காணித்து தடுப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்கோளகாப்பகம் சார்பில் வன உயிரின கட்டுப்பாட்டு பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்களுக்கு கிடைத்த தகவல்படி தேவிபட்டினத்தில் சாகுல் அமீது 45, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ பச்சை கடல் அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டது. சாகுல் அமீதை கைது செய்து வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என ராமநாதபுரம் வனத்துறையினர்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ