ராமநாதபுரத்தில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.கேணிக்கரை எஸ்.ஐ., தங்கஈஸ்வரன் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லட்சுமி ஊருணி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை பிடித்து சோதனை செய்த போது 24 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.போலீசார் விசாரணையில் அவர் ராமநாதபுரம் வைகை நகர் செல்வராஜ் மகன் விஜய் 26, என தெரிந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசார் விஜயை கைது செய்தனர்.