உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மைத்துனரை அரிவாளால்  வெட்டியவர் கைது 

மைத்துனரை அரிவாளால்  வெட்டியவர் கைது 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குடும்பத்தகராறில் மைத்துனரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் வீரக்குமார் 42. கொத்தனார் வேலை செய்கிறார். இவரின் தங்கை ஜோதிக்கும், அவரது கணவர் கார்த்திக் 42, இடையே கருத்து வேறுபாட்டால் ஜோதி தனது அண்ணன் வீரக்குமார் வீட்டில் நான்கு மாதங்களாக வசிக்கிறார். ஜோதியின் கணவர் கார்த்திக் வீரக்குமாரின் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் அரிவாளால் வீரக்குமாரை வெட்டினார்.காயமடைந்த வீரக்குமார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரக்குமார் புகாரில் கேணிக்கரை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.வீரக்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி