உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

ராமநாதபுரம்: ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுமை துாக்கும் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 28. சுமை துாக்கும் தொழிலாளியான இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தை திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி