உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகைக்காக மூதாட்டியை கொலை  செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நகைக்காக மூதாட்டியை கொலை  செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருவாடானை கரையக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலாவதி 84. இவரது மகன் ஐயனார் கனடாவில் வசித்து வருவதால் கரையக்கோட்டையில் உள்ள வீட்டில் நீலாவதி தனியாக வசித்து வந்தார். தினமும் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கி வருவது வழக்கம். தொடர்ந்து இரு நாட்கள் டீ வாங்க வராததால் டீக்கடை வைத்திருக்கும் முருகையா 2017 ஜூன் 6 ல் மூதாட்டி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் இறந்து கிடப்பதை கண்டு அதே ஊரில் வசிக்கும் மூதாட்டியின் அக்காள் மகன் ஆதியப்பனிடம் தெரிவித்துள்ளார்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது சித்தி அணிந்திருந்த 5 பவுன் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து திருவாடானை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தினர். அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் மகன் பாண்டி 41, நகை, பணத்தை பறிப்பதற்காக கொலை செய்தது தெரிய வந்தது. பாண்டியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து தங்க செயின், இரு மோதிரம், ரூ.19,800 பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கு ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11,000 அபராதம்விதித்து நீதிபதி கவிதா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !