மேலும் செய்திகள்
ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்புகிறது
21-Dec-2024
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், தாதனேந்தல் ஊராட்சி, பள்ளப்பச்சேரி கிராம ஊராட்சி தலைவியாக, ஜன., 5 வரை பதவியில் இருந்தவர் கோகிலா. இவரது கணவர் ராஜேந்திரன், 48. தி.மு.க., ஆதரவாளரான இவர், நேற்று முன்தினம், 'நவீன கோடாங்கி' என்ற பெயரில் கவர்னர் ரவிக்கு எதிரான கருத்துகளை, உடுக்கு அடித்து பேசினார்.பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உடற்பயிற்சி கூடம், ராஜேந்திரன் பராமரிப்பில் இருந்தது. இங்கு பாம்பு வளர்க்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதாவிற்கு தகவல் கிடைத்தது. வன அலுவலர், பணியாளர்கள் சோதனை நடத்தினர். அங்கு, 4 அடி நீள விஷமுள்ள நாகப்பாம்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாம்பை வளர்த்து வந்த ராஜேந்திரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.பறிமுதல் செய்த நாகப்பாம்பை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். வன உயிரின பாதுகாப்பு சட்டம் - 2022 திருத்தத்தின்படி, அதிகளவு பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியல் - 1ல் நாகப்பாம்பு உள்ளது. இதை வளர்ப்பதோ, பிடிப்பதோ கூடாது என, வனத்துறையினர் தெரிவித்தனர்.கைதான ராஜேந்திரன், சில சினிமா படங்களில் நடித்துள்ளார்.
21-Dec-2024