உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு 10 ஆண்டு சிறை

கோயில்களில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு 10 ஆண்டு சிறை

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட இரு கோயில்களில் உண்டியல் பணத்தை திருடியவருக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சுரேஷ் 37. இவர் அப்பகுதியில் கதிர் அடிக்கும் மிஷினில் வேலை செய்துள்ளார். அப்பகுதி கோயில்களில் நோட்டமிட்டு வந்தவர் 2022 டிச., 27ல் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினார். அப்போது அவரை கைது செய்த போலீசாரிடம் சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் 18 திருட்டு வழக்குகள் இருப்பதாக தெரிவித்தனர்.பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சுரேைஷ போலீசார் ஆஜர்படுத்தினர். நயினார்கோவில், அருகில் உள்ள நகரமங்கலம் உள்ளிட்ட கோயில்களில் உண்டியல் பணத்தை திருடியதாக தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பாண்டி மகாராஜா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ