உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மண்டபம் வட்டார கூட்டமைப்பு  முன்மாதிரி பயிற்சி நிறைவு விழா

 மண்டபம் வட்டார கூட்டமைப்பு  முன்மாதிரி பயிற்சி நிறைவு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டார கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நிறைவடைந்தது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு உருவாக்குவதற்காக 2024--25 நிதியாண்டில் மண்டபம் வட்டார அளவிலான கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டது. தொலைநோக்கு பார்வை பயிற்சி, ஆண்டு செயல்திட்டம் மற்றும் வணிக திட்டம் சார்ந்த பயிற்சிகள் 36 நாட்கள், கள பயிற்சி 70 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் பாபு தலைமையில் நடந்தது. மாவட்ட வள பயிற்றுனர் நம்பு ரஞ்சித் முன்னிலை வகித்தார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், நம்பிக்கையாளர் குழு தேர்வு செய்யப்பட்டவர் களுக்கு பணி ஏற்பு உறுதிமொழி சான்றிதழ் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டத்தில் தங்கச்சிமடம், வாலாந்தரவை, இரட்டையூரணி, அழகன்குளம், வேதாளை, பனைக்குளம் ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த2277 உறுப்பினர் களுக்கு பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 240 வழங்கப்பட்டது. வட்டார இயக்க மேலாளர் மணிமாலா, மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை