உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாம்பழம் நாவல்பழம் விற்பனை அமோகம்

மாம்பழம் நாவல்பழம் விற்பனை அமோகம்

திருவாடானை: திருவாடானை, தொண்டியில் மாம்பழம், நாவல்பழம் சீசனை முன்னிட்டு விற்பனை மும்முரமாக நடக்கிறது.மாம்பழம் மற்றும் நாவல்பழங்கள் ஜூன், ஜூலை, ஆக., வரை சீசன் காலமாகும். திண்டுக்கல் போன்ற பல வெளிமாவட்டங்களில் மார்க்கெட்டிற்கு வரும் பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நாவல்பழம் நல்லது என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். அதே போல் மாம்பழமும் விற்பனை அமோகமாக உள்ளது. மாம்பழம் கிலோ ரூ.30க்கும், நாவல்பழம் கிலோ ரூ.100க்கும் விற்கிறது என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை