மருது பாண்டியர்கள் நினைவுநாள்
ராமநாதபுரம்: - ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மருது பாண்டியர்கள் 224 வது நினைவு நாள் விழா நடந்தது. ஊர்தலைவர் தர்மா தலைமை வகித்தார். விழாவில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட புலிப்படை அமைப்பு சார்பில் அதன் தலைவர் ரத்தினகுமார் தலைமையில் மலர் துாவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்.