மேலும் செய்திகள்
மா.கம்யூ., வட்ட மாநாடு
24-Sep-2024
சிக்கல்: மார்க்சிஸ்ட் கடலாடி கிழக்கு தாலுகா மாநாடு சிக்கலில் நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். பெரியசாமி கொடியேற்றினார். ராமாயி முன்னிலை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் பச்சைமால் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் துவக்க உரையாற்றினார்.தாலுகா குழு செயலாளர் அம்ஜத்கான் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். நிர்வாகிகள் ஜெயக்குமார், சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலையரசன், தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு உட்பட பலர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் சத்யராஜ் நன்றி கூறினார்.ஒன்பது பேர் கொண்ட தாலுகா குழு அமைக்கப்பட்டது. அதில் மீண்டும் கடலாடி கிழக்கு தாலுகா குழு செயலாளராக அம்ஜத் கான் தேர்வு செய்யப்பட்டார். சிக்கலை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும்.வாலிநோக்கம் சத்தார் கோயில் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24-Sep-2024