உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நோய் பரப்பும் மையமாக மாறியது மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை

நோய் பரப்பும் மையமாக மாறியது மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பழைய அவசர சிகிச்சை வார்டு பகுதியில் கழிவு நீர் ஆறாக ஓடுவதால் மக்களுக்கு நோய் பரப்பும் மையமாக உள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பழைய கட்டடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் பழைய அவசர சிகிச்சை வார்டாக இருந்த பகுதியை காசநோய் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தப்பகுதியில் ஸ்கேன் மையம், நரம்பியல் சிகிச்சை பிரிவு,ரத்த வங்கி செயல்படுகின்றன.இந்த கட்டடத்தின் முன்பகுதியில் கழிவு நீர் வெளியேறுகிறது. இந்த கழிவு நீரால் கட்டடத்திற்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். நோயாளிகளின் நோய் தீர்க்கும் மையமாக இருக்க வேண்டியஅரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நோய் பரப்பும் மையமாக செயல்பட்டு வருகிறது.மருத்துவமனை நிர்வாகம் பழயை கட்டடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கழிவு நீர் வெளியேறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை