மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வநாயகபுரம் கிராமத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.செல்வநாயகபுரம், வைத்தியனேந்தல், மணலுார், நல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலக முகாமில் முதுகுளத்துார் பேரூராட்சி பகுதி மக்கள் கலந்து கொண்டு பதிவு செய்தனர்.