பால்குடம் ஊர்வலம்
பரமக்குடி : பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் பூமாரி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் பால்குட விழா ஊர்வலம் நடந்தது. செப்.,3 ல் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன் தினம் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தீபாராதனைக்கு பின் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.