தொண்டி பஸ்ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மூடல்
தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்டில் பாலுாட்டும் அறை மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.தொண்டி பஸ்ஸ்டாண்டில் தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் கைக்குழந்தையோடு வரும் பெண்கள் பஸ்ஸ்டாண்டில் திறந்த வெளியில் குழந்தைகளுக்கு பசியாற்ற சிரமப்படுகினர். தாய்மார்களின் நலன் கருதி தங்கள் குழந்தைகளுக்கு தனிமையில் பாலுாட்டும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் தனி அறை அமைக்கப்பட்டது.இதனால் பாதுகாப்பாக குழந்தைக்கு பசியாற்றினர். தற்போது இந்த தனி அறை காலையில் சில மணி நேரம் மட்டும் திறக்கப்பட்டு மற்ற நேரங்களில் அறை மூடிக் கிடக்கிறது. இதனால் பஸ்ஸ்டாண்டிற்கு வரும் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்ஸ்டாண்டில் உள்ள பாலுாட்டும் அறையை காலை முதல் மாலை வரை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.