உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் மினி மாரத்தான் போட்டி

கடலாடியில் மினி மாரத்தான் போட்டி

கடலாடி: கடலாடியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட சேது சீமை பட்டாளம் நலச்சங்கத்தின் 6வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் ராணுவ வீரரின் நினைவாக மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் 10 வயதிற்குட்பட்டகளுக்கு 5 கி.மீ., 10 வயதுக்கு மேற்பட்டபவர்களுக்கு 10 கி.மீ., எல்லையாக நினைக்கப்பட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசுகளை ராணுவத்தில் பணியாற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வழங்கினர். மினி மாரத்தான் போட்டியில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் மதுரையைச் சேர்ந்த கண்ணன் 70,க்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ