உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லை ராமநாதபுரத்தில் எச்.ராஜா காட்டம் 

அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லை ராமநாதபுரத்தில் எச்.ராஜா காட்டம் 

ராமநாதபுரம்:அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லைஎன்று ராமநாதபுரத்தில் நடந்த பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் 850 போலீசார் போதை கடத்தலுக்கு துணை போனதாக உளவுத்துறை தெரிவித்து உள்ளது. முதல்வர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போலீஸ் துறை கடமை தவறியுள்ளது. முதல்வர் மட்டுமல்ல. அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ், பொன்முடி தங்கள் இலாகா வேலைகளை பார்க்காமல் மற்ற வேலைகளை செய்து வருகின்றனர்.இது கல்வி அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டமான திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரின் மகன் 45 குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு நடவடிக்கை இல்லை. ஆனால் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியவரை பிடிக்க200 போலீசார் செல்கின்றனர். அவர் என்ன பயங்கரவாதியா.தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. 1300 அரசுப் பள்ளிகள் மூட வேண்டிய நிலையில் உள்ளது.அமைச்சர்கள் தங்கள் துறைகளில் கவனம் செலுத்துவதில்லை.முதல்வரின் கீழ் உள்ள போலீஸ் துறையில் தனது கடமையை செய்ய தவறி விட்டதால் ஆட்சியை ஆள வேண்டும், இல்லை என்றால் வெளியேற வேண்டும்.மகனுக்கு மகுடம் சூட்டுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவாவது போலீஸ் துறையில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மணி நேரம் நேரடியாக எச்.ராஜா வாதம் செய்ய தயாரா என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.நான் 1964 முதல் 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வருகிறேன். செல்வப்பெருந்தகை புரட்சி பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பகுஜன் சமாஜ் கட்சி, ஐந்தாவதாக காங்., கட்சியில் ஐயக்கியமாகியுள்ளார். ஐந்து கட்சி மாறிய அவர் என்னுடன் வாதம் செய்ய தகுதியில்லாதவர். ஆடிட்டர் கொலை வழக்கில் அவரது பெயர் செல்வம் என்று தான் உள்ளது. பெருந்தொகை சம்பாதித்து விட்டதால் செல்வ பெருந்தகையாகி விட்டார். ராகுல் காந்தி பற்றி கூறிய கருத்திலிருந்து நான் பின் வாங்கப்போவதில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை