மேலும் செய்திகள்
'செகண்ட் ஹேண்ட்' வாகனங்கள் வாங்கினால் உஷார்!
20-Sep-2025
ராமநாதபுரம்: குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் கடல்மீன் விற்பனை மூலம் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பும், கூடுதல் வருவாயும் கிடைத்தது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால் நடமாடும் கடல்மீன் உணவு விற்பனைக்காக வாங்கிய வாகனங்கள் பயன்பாடு இன்றி மீன்வளத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் புதிய வாகனங்கள் வீணாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர் நலத்துறை சார்பில் கடலோர மாவட்டங்களில் நடமாடும் கடல்மீன் உணவு விற்பனை மையம் இயக்கி வருகிறது. இதன் மூலம் கடலில் பிடித்த தரமான மீனில் சமைத்த உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரத்தில் மீனவர் கூட்டுறவு இணையம் மூலம் கடல்மீன் விற்பனை மையம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், தனுஷ்கோடி, அரியமான் கடற்கரை, மண்டபம் கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதியில் வாகனங்களில் உணவு சமைத்து விற்பனை செய்யப்பட்டது. இதில் இறால் பிரியாணி, இறால் வருவல், மீன் குழம்பு சாப்பாடு உள்ளிட்ட கடல்சார் உயிரினங்களில் இருந்து சமைத்த உணவுகள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதில் வழங்கப்படும் உணவு தரமானதாகவும், குறைவான விலையிலும் உள்ளதால் பலர் விரும்பி வந்து உண்டனர். இந்நிலையில் நடமாடும் கடல்மீன் உணவகத்திற்கு ஒதுக்கப்பட்ட இரு வாகனங்கள் பல மாதங்களாக மீன்வளத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தாமல் துசி படிந்து டயர், உதிரிபாகங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மீனவர் நலசங்க நிர்வாகிகள் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனுஷ்கோடி, அரியமான் கடற்கரையில் அதிக அளவில் பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் கடல்சார் உணவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் தரமான, புதிதாக பிடித்த மீனில் தயாரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு மீன்வளத்துறை சார்பில் பிரத்யேக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பும், கூடுதல் வருவாயும் கிடைத்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் நீண்ட நாட்களாக மீன்வளத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அவற்றை ஒப்பந்த முறையில் மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
20-Sep-2025