உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெருக்களில் கொசு மருந்து

தெருக்களில் கொசு மருந்து

முதுகுளத்துார் ; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. முதுகுளத்துாரை அடுத்த கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. முதுகுளத்துார் அரசு, தனியார் மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகுளத்துார் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் நேதாஜி முன்னிலையில் தெருக்களில் துாய்மைப் பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர்.இதேபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை