ரெகுநாதபுரத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டது
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி கிராமங்களில் சமீபத்தில் பெய்த மழை நீருடன் கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. பொதுமக்கள் ரெகுநாதபுரம் ஊராட்சி சார்பில் கொசு புகை மருந்து மற்றும் கிணறுகளில் ஊற்றக்கூடிய அபேட் மருந்து தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ரெகுநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலாளர் நளினா தேவி செய்திருந்தனர்.