மேலும் செய்திகள்
தாயுமானவர் திட்டம்..
15-Aug-2025
பரமக்குடி: பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தில் முதியோருக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் துவக்கப்பட்டது. தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் பொட்டிதட்டி கிராமத்தில் எம்.எல்.ஏ., முருகேசன், முதியோருக்கு வீடு தேடி சென்று பொருட்களை வழங்கினார். உடன் போகலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் குணசேகரன், பொட்டிதட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் இருந்தனர்.
15-Aug-2025