உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்பேச்சுக்கு மாதர் சங்கம் கண்டனம்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்பேச்சுக்கு மாதர் சங்கம் கண்டனம்

ராமநாதபுரம்:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் சமீபத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பெண்கள் குறித்து பேசியதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை செயலாளர் கற்பகம் கண்டனம் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் 100 நாள் வேலைக்கான சம்பளம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். இதில் மாநில துணை செயலாளர் கற்பகம் பேசியதாவது: பெண்களை மரியாதைக் குறைவாக பேசக்கூடிய பல அரசியல் கட்சிகள் உள்ளன. சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பயம் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் சமீபத்தில் பெண்களை இலவசப் பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதை பெண்கள் மீதான வன்முறையாக கருத வேண்டும். அவர் மீது தனிமனித உரிமை மீறல், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி நெருங்கும் நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி