மேலும் செய்திகள்
குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு
20-Jan-2025
பரமக்குடி : பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டோரங்களில் கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.பரமக்குடி நகராட்சி முழுவதும் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ஐந்து முதல் 20க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன.இதனால் புதிதாக ஊருக்குள் மற்றும் தெருக்களில் நுழைவோர் நாயக்கடிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் கிராமப் பகுதிகளும் இதே நிலை தொடர்கிறது. தொடர்ந்து பரமக்குடி, ராமநாதபுரம் இருவழிச் சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிவது அதிகரித்துள்ளது.இதனால் காலைமற்றும் இரவு நேரங்களில் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரை துரத்தி வருகிறது. இச்சூழலில் வாகன ஓட்டிகள் எதிரிலும் வரும் வாகனங்களுடன் மோதும் சூழலில் விபத்து அதிகரித்து வருகிறது. எனவே உயிர் பயத்தை உண்டாக்கும் நாய்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கு.க., செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெறி பிடித்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிடைக்கும் போது உயிர் அச்சம் உண்டாகிறது.எனவே நோய் பிடித்த நாய்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Jan-2025