ரோட்டோரத்தில் குப்பை எரிப்பதால் புகையால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டோரத்தில் குப்பை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் புகையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் தினமும் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை ரோட்டின் ஓரத்தில் குவித்து வைக்கும் சுகாதார பணியாளர்கள் குப்பைக்கு தீ வைக்கின்றனர். இதில் ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகளுக்கு ரோடுகளே தெரியாத அளவிற்கு இடையூறு ஏற்படுகிறது.அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் புகையால் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர். ரோட்டில் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குப்பையை எரிப்பதால் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பையை முறையாக அகற்ற வேண்டும். தீ வைத்து எரிப்பதை தடை செய்ய வேண்டும்.