உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில போட்டிக்கு தகுதி பெற்ற முதுகுளத்துார் மாணவர்கள்

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற முதுகுளத்துார் மாணவர்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் மாவட்டத்தில் இருந்து பரமக்குடி, முதுகுளத்துார் உட்பட 8 குறு வட்டார அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான 19 வயது பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் கிஷன் முதலிடம், நீளம் தாண்டுதல் சுலைமான் ஷேக் இரண்டாம் இடம், ஈட்டி எறிதல் நிஷாந்தன் முதலிடம், 3000 மீட்டர் ஹரிணி முதலிடம், 17 வயது பிரிவில் 3000 மீட்டர் இலக்கிய செல்வன் முதலிடம், 200 மீட்டர், நீளம் தாண்டுதலில் ராகுல் முதலிடம் பெற்றுள்ளனர். தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமால்பாட்சா, முகமது உசேன், தமிமுன் அன்சாரி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ஜஹாங்கீர், கல்விக்குழு தலைவர் காஜா நஜிமுதீன், தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி, மாவட்ட தடகள பயிற்றுநர் ஹனிபா உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை