உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம்

முதுகுளத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., க்கள் ஜானகி, அன்புகண்ணன், துணைத்தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தனர். மேலாளர் ஜெயகார்த்திக் வரவேற்றார்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மனு அளித்தனர். பருவ மழைக்காலம் என்பதால் கிராமங்களில் தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும் என்று ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை