மேலும் செய்திகள்
செல்லி அம்மன் பொங்கல் விழா
21-Aug-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் காளியம்மன், செங்கூத்த அய்யனார் கோயில் பால்குடம் மற்றும்முளைப்பாரி விழா நடந்தது. 10 நாட்களுக்கு முன் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து முளைக்கொட்டு திண்ணை உட்பட முக்கியவீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின் காளியம்மன், செங்கூத்த அய்யனாருக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மக்கள் கிடா வெட்டியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். முளைப்பாரிஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர்.
21-Aug-2024