உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முளைப்பாரி ஊர்வலம்

 முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: கமுதி அருகே வளையபூக்குளம் கிராமத்தில் பெரிய முத்தம்மன், சந்தன மாரியம்மன், பத்திரகாளியம்மன், பெரியாண்டவர் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் பெரிய முத்தம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நிகழ்ச்சியாக முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் முளைப்பாரி துாக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊருணியில் கரைத்தனர். ஏற்பாடுகளை வளையபூக்குளம் கிராம சத்ரிய நாடார்கள் உறவின் முறையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி