உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி ஊர்வலம்

கமுதி: -கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. காப்புகட்டிய பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். பின்பு காளியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன செலுத்தினர். நிறைவு விழாவாக முளைக்கட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரியை கிராமமக்கள் முக்கிய விதிகளில் தூக்கி ஊர்வலமாக சென்று குண்டாற்றில் கரைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !