தெரு நாய்களுக்கு கு.க., செய்ய விரைவில் நகராட்சி ஏற்பாடு நகராட்சி கூட்டத்தில் தகவல்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி யில் தெரு நாய்களுக்கு விரைவில் கு.க., செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடி நகராட்சி கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. கமிஷனர் தாமரை முன்னிலை வகித்தார். மேலாளர் தங்க ராஜ் வரவேற்றார். சத் துணவு மேலாளர் ராஜேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே நடந்த விவாதம்: மின்விளக்குகள் பல தெருக்களில் எரிவது இல்லை. நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறைகளை தெரிவிப்பதோடு சரி. அதனை அதி காரிகள் சரி செய்வதில்லை. நகராட்சி வீட்டு மனை களுக்கு அப்ரூவல் கொடுக்கும் போது அப்பகுதி நிலை குறித்து கவுன்சிலர்களிடம் கேட்க வேண்டும். முக்கியமான தெருக்களில் நகராட்சி குடிநீர் பல நாட்களாக வராமல் உள்ளது. வாறுகால்கள் முறைப்படுத்தி கட்ட வேண்டும். பரமக்குடியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, என கவுன்சிலர்கள் பேசினர். * கூட்டத்தில் கவுன் சிலர்கள் தெரிவிக்கும் குறைகள் அடுத்த கூட்டத்திற்குள் சரி செய்யப்படும். அந்தந்த துறை அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நாய்களுக்கு கு.க., செய்வதுடன் நோய் பீடித்த நாய்களையும் பிடித்து கண்காணிக்கப்பட உள்ளது. இதற்காக கால்நடை மருத்துவமனையில் நகராட்சி மூலம் கூண்டுகள் அமைக்கும் பணி முடிந்த பின்னர் பகுதிவாரியாக நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும், என கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி துணை பொறியாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் (பொ) மதன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.