வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறுபான்மை மக்களுக்காக பல கட்சிகள் உள்ளன ஆனால் ஹிந்துகளை பாதுகாக்க பாரதிய ஜனதா எனும் கட்சி மட்டுமே உள்ளது. அதுபோல நமது உரிமைக்காக போராட ஹிந்து முண்ணணி எனும் அமைப்பு மட்டுமே உள்ளது
ராமநாதபுரம்:''ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும், எழுச்சிக்காகவும் தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. யாரும் அரசியல் செய்யவில்லை. தமிழின விரோதிகள் தான் மாநாட்டை எதிர்க்கின்றனர்,'' என, ராமநாதபுரத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.ராமநாதபுரம் பா.ஜ., அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா நாளில் பங்கேற்ற அவர் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு வரலாறு காணாத அளவில் 52 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் யாரும் அந்தந்த டி.எஸ்.பி.,க்களிடம் அனுமதி பெற தேவையில்லை. வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் கணக்கிட்டு கொள்ளலாம். அந்த வாகனங்களின் ஆவணங்களை வாகனம் நிறுத்தும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வாகனங்களில் வர வேண்டும். தமிழக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் யாராவது ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்களா. முருக பக்தர்கள் மாநாடு நடத்தி பல மாதங்கள் ஆன பின்பும் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அந்த மாநாடு நடத்தியதற்கான செலவு கணக்குகளை கேட்கிறார்.தமிழக அரசு நடத்திய மாநாடு சட்ட விரோத மாநாடு. கோயில் கணக்குகளை காட்டாவிட்டால் எங்கள் கோயில் பணத்தை எப்படி பயன்படுத்தினீர்கள் என கேட்போம். ஹிந்து அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்காக வருவோரை வரவேற்க வேண்டும். முருக கடவுளை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றோர் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் தமிழின விரோதிகள் என்றார்.
சிறுபான்மை மக்களுக்காக பல கட்சிகள் உள்ளன ஆனால் ஹிந்துகளை பாதுகாக்க பாரதிய ஜனதா எனும் கட்சி மட்டுமே உள்ளது. அதுபோல நமது உரிமைக்காக போராட ஹிந்து முண்ணணி எனும் அமைப்பு மட்டுமே உள்ளது