உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபத்தில் அருங்காட்சியகம் அழகன்குளம் மக்கள் எதிர்ப்பு

மண்டபத்தில் அருங்காட்சியகம் அழகன்குளம் மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வு மையத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைத்து வைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு அழகன்குளம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அழகன்குளத்தில் 1987 முதல் அகழாய்வு எட்டு கட்டங்களாக நடந்தது. இதில் 2016 ல் நடந்த எட்டாவது கட்டத்தில் சுடுமண் உறைகிணறு, பாண்டியர் கால நாணயங்கள், ரோமன் பானை ஓடுகள் உள்ளிட்ட 13 ஆயிரம் பொருட்கள் எடுக்கப்பட்டன.300 முதல் 350ம் ஆண்டு வரையிலான வாழ்க்கை முறைகள் கார்பன் 'சி 14' என்ற ஆய்வின் மூலம் 2360 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அழகன்குளத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட போது அழகன்குளத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 2020ல் இடம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கி.மீ.,ல் அமைந்துள்ளது.இந்நிலையில் தமிழக அரசு சட்டசபை மானியக்கோரிக்கையில் மண்டபம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அழகன்குளம் மக்கள் கூறியதாவது:கீழடி அகாழாய்வு கூடம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லுார் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட நிலையில் அழகன்குளத்தை மட்டும் புறக்கணிப்பு செய்வது ஏன். மண்டபத்திற்கும் அழகன்குளத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது.அங்கு அருங்காட்சியகம் அமைத்தால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அரசு ஏற்கனவே அறிவித்தது போல் அழகன்குளத்தில் தேர்வு செய்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை