உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முத்துப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

முத்துப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நவ.18ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.வேத பாராயணம், ஹோம வேள்வி, பூர்ணாஹூதி தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது.யாகசாலை பூஜை நிறைவிற்கு பின் கடம் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்கள் சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள்நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்துப்பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை