மேலும் செய்திகள்
இரண்டு மா.செ., நியமனம்: பன்னீர் அறிவிப்பு
29-Jan-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி தென் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. அவரது பெயரை புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சூட்ட வலியுறுத்தினோம். அது நிராகரிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் பெயர் சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
29-Jan-2026