உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

ராமேஸ்வரம்: பாம்பன் கிளை நுாலக வாசகர் வட்டம் மற்றும் பாம்பன் கிளை நுாலகம் இணைந்து 57-வது தேசிய நூலக வார விழா கொண்டாடினர். இதில் பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தினர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்லம்மாள், பாம்பன் கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா, துணைத்தலைவர் ராமு, நிர்வாகி ராமசாமி பங்கேற்றனர். மாணவர்கள் 15 பேர் நுாலக உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். ஏற்பாடுகளை பாம்பன் கிளை நுாலகர் ரிசாலத் அலி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி