உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய மக்கள் தொகை கல்வி திட்டம் மாணவர்களின் நடித்தல் போட்டி

தேசிய மக்கள் தொகை கல்வி திட்டம் மாணவர்களின் நடித்தல் போட்டி

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தேசிய மக்கள் தொகை கல்வி திட்டம் தொடர்பான மாவட்ட அளவில் மாணவர்களுக்கான நடித்தல் போட்டி நடந்தது. பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி தேசிய மக்கள் தொகை கல்வி சார்ந்த நடித்தல் போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது வளரிளம் பருவத்திற்கான வாழ்வியல் திறன்கள் தொடர்பாக, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் நடித்துக் காண்பித்தனர். இதில் புழுதிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம், இரட்டை யூரணி அரசு மேல்நிலைப் பள்ளி 2ம் இடம், பரமக்குடி ஆர்.எஸ்., அரசு பள்ளி 3ம் இடம் பெற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற புழுதிக் குளம் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்கின்றனர். பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பிரபாகர், காஜா முகைதீன் நடுவர்களாக இருந்தனர். இதில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 67 பேர் பங்கேற்றனர். சண் முகவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி