உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம் நவராத்திரி விழா அக்.,3ல் துவக்கம்

திருவாடானை: மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசூரன் என்ற அரக்கனுடன் ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு 10வது நாள் வெற்றி கொண்ட சம்பவம் தான், நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா நாட்களில் வீடுகள், கோயில்களில் பொம்மைகள் வைத்து கொலுவழிபாடு நடத்தபடும். திருவாடானை சிநேகவல்லி அம்மன் கோயிலில் அக்.2லும், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் அக்.3லும் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்காரமும், பூஜையும் நடக்கிறது. இரவில் மண்டபத்தில் அம்மன் எழுந்தருள்வார். இவ்விழாவில் திருவிளக்கு பூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ