உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நியோ மேக்ஸ் நிறுவனம் ரூ.4.96 கோடி மோசடி; பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தல்

நியோ மேக்ஸ் நிறுவனம் ரூ.4.96 கோடி மோசடி; பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தல்

ராமநாதபுரம் : மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ராமநாதபுரத்தில் மக்களிடம் ரூ.4 கோடியே 96 லட்சம் மோசடி செய்துள்ளது. அந்நிறுவனத்தினரிடமிருந்து பணத்தை பெறுத்தர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த ராமநாதபுரம் பொதுமக்கள், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேற்று மனு அளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் ஓம்சக்திநகர், அரண்மனை பகுதிகளில் நியோ மேக்ஸ் நிறுவன கிளை அலுவலகத்தில் 2020 முதல் 2023 வரை 69 பேர் ரூ.4 கோடியே 96 லட்சத்தை பல்வேறு தவணைகளாக செலுத்தினர். இத்தொகைக்கு 3 ஆண்டுகளில் இரு மடங்கு பணம் கிடைக்கும் எனக்கூறி நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டனர். இது தொடர்பாக மதுரை பொருளாதார பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து உத்தரவும் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணத்தை தரவில்லை.மாறாக அந்நிறுவனத்தினர் மீண்டும் வேறு நிறுவனங்களுடன் இணைந்து ராமநாதபுரத்தில் நிலங்களை வாங்கி வியாபார ரீதியாக விற்பனை செய்கின்றனர். எங்களுக்கு பணத்தை தராமல் நிலங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 69 பேருக்கும் 4 கோடியே 96 லட்சத்தை பெற்றுத்தர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

अप्पावी
மார் 25, 2025 11:14

தத்திங்களா... பணம் கட்டும்போது எந்த போலீசையாவது கேட்டீங்களா? போங்க. போய் அடுத்த கம்பெனில முதலுடு செய்து மூணே மாசத்தில் நாலுமடங்கா குடுக்கறாங்களாம். நான் தான் மேனேஜிங் டைரக்டர்.


ramesh
மார் 25, 2025 05:45

எத்தனை ஏமாற்றிய செய்திகள் தினந்தோறும் வந்தாலும் அதிக வட்டி கிடைக்கும் என்ற பேராசையால் பணத்தை இழந்து நிற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ