மேலும் செய்திகள்
சேதமான மின்கம்பத்தை மாற்றியமைப்பது அவசியம்
06-Jan-2026
கமுதி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி -சாயல்குடி ரோடு பஜாரில் சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கமுதி சாயல்குடி ரோடு பஜார் ரோட்டோர மின்கம்பம் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அருகில் பள்ளி வளாகம், கடைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் இவ்வழியே செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதி துணை மின்வாரியத்துறை பணியாளர்கள் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மாற்றியுள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
06-Jan-2026