மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
02-Sep-2025
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் புதிய நிழற்குடையால் பயனற்ற நிலையில் மர நிழலில் பயணிகள் ஒதுங்குகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ.,ல் உள்ள ரெகுநாதபுரத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பஸ் ஏறுவதற்காகவும், சனிக்கிழமை நடக்கும் வாரச்சந்தையில் பொருள் வாங்கவும் ஏராளமானோர் வருகின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே பயணியர் நிழற்குடை இல்லாத நிலையில் மரத்தின் நிழலில் ஒதுங்கும் நிலை பல ஆண்டுகளாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தை திடல் அருகே பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ள நிலையில் அங்கே பொதுமக்கள் நின்று பஸ் ஏறி செல்வதற்கான நிலை இல்லை. பொதுமக்கள் கூறியதாவது: வெயில், மழையில் தப்பிக்க பயணியர் நிழற்குடை அவசிய தேவையாக உள்ளது. எனவே வரக்கூடிய மழைக் காலத்தை முன்னிட்டு தற்காலிக ஷெட்டுடன் கூடிய பயணியர் நிழற் குடையை பஸ் ஸ்டாப் அருகே உள்ள பகுதியில் அமைக்க வேண்டும். ரெகுநாதபுரத்தில் சாலையோரங்களில் அதிகளவு ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளது. அவற்றை முறையாக அகற்றினால் போக்குவரத்திற்கு வழி கிடைக்கும் என்றனர்.
02-Sep-2025