உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிதாக கட்டிய காம்பவுண்ட் சுவர் இரு மாதத்தில் விரிசல்

புதிதாக கட்டிய காம்பவுண்ட் சுவர் இரு மாதத்தில் விரிசல்

சிக்கல்: சிக்கல் அருகே ஆண்டிச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்., திட்டத்தில் ரூ.4.71 லட்சம் மதிப்பீட்டில் 60 மீ., நீளத்திற்கு காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. கடலாடி யூனியன் கிராம ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தில் புதிய காம்பவுண்ட் சுவர் விரிசலுடன் உள்ளது. பெற்றோர் கூறியதாவது:அரசு திட்டப் பணிகளை முறையாக ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டும். அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க வேண்டும். புதிய காம்பவுண்ட் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை