பார்க்கிங் வசதியில்லை; ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல்; முகூர்த்தம் நாட்களில் மக்கள் கடும் அவதி
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதிகளான அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் வணிக நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், ஓட்டல்கள் நிறைய உள்ளன. பஸ் ஸ்டாண்ட், - கேணிக்கரை ரோட்டிலுள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி உள்ளது.முகூர்த்த நாளை முன்னிட்டு வழி விடுமுருகன் கோயில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோடு, ரயில்வே பீடர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டோரத்தில் கண்டபடி டூவீலர்கள், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் சிரமப்பட்டனர். முகூர்த்த நாட்களில் வழிவிடு முருகன் கோயில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.