வடமாடு மஞ்சுவிரட்டு விழா
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே தேர்போகியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. மாட்டின் கழுத்தில் நீண்ட வடக்கயிறு கட்டப்பட்டு மைதானத்தில் விடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர். குறிப்பிட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளை களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.