உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலம் நுழைவில் கருவேல மரங்கள்: குப்பையால் துர்நாற்றம்

பாம்பன் பாலம் நுழைவில் கருவேல மரங்கள்: குப்பையால் துர்நாற்றம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் நுழைவில் வளர்ந்துள்ள கருவேலமரங்களுக்குள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988ல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளதால், இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பாலம் கிழக்கு நுழைவில் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.இதனுள் விஷ வண்டுகள், பாம்புகள் புகலிடமாக உள்ளது. இதனால் விஷஜந்துகள் சாலை குறுக்காக செல்வதால் மக்கள் பீதி அடைகின்றனர். மேலும் பாம்பனில் ஆடு, மாடு, கோழி இறைச்சி விற்கும் வியாபாரிகள், இதன் கழிவுகளை மரங்களுக்குள் கொட்டி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அருவெருப்புடன் பாலத்தை கடந்து செல்கின்றனர்.எனவே கருவேல மரங்களை அகற்றி, இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி