ஏர்வாடியில் அந்தரத்தில் தொங்கும் மின்கம்பம் கவனியுங்க ஆபீஸர்
கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சி சேர்மன் தெருவில் சேதமடைந்த நிலையில் அந்தரத்தில் தொங்கும் மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.நவ.6ல் சரக்கு வாகனம் இப்பகுதியில் சென்ற போது மின்கம்பத்தில் மோதியதில் அதன் நடுப்பகுதி துண்டாகி தொங்கியது. தற்போது இந்த ஆபத்தான கம்பத்தின் வழியாக மின் சப்ளை உள்ளது. மின் கம்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மின்வாரியத்தினர் பெற்றுள்ளனர்.ஆனால் ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே உத்தரகோசமங்கை துணை மின் நிலைய அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும்.