பெரியகண்மாய் கரையோரங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடி : சாயல்குடி பெரியகண்மாய் கரையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பொதுப்பணித்துறை பாசன பெரிய கண்மாய் 590 ஏக்கரில் அமைந்துள்ளது. கண்மாயின் உட்புறங்களில் அதிகளவு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. 2019ல் குடிமராமத்து பணிகள் நடந்தது. அதன் பிறகு பெயரளவில் அவ்வப்போது சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.கடந்த 2023 டிச.,ல் அதிகளவு மழை மற்றும் நீர்வரத்தால் சாயல்குடி பெரிய கண்மாய் நிரம்பியது. கண்மாய் நீர் வழித்தடங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் உரிய முறையில் கண்மாய் நீரை சேமித்து வைக்க இயலாத நிலை தொடர்கிறது.சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் 2 கி.மீ.,க்கு கண்மாய் கரையோரப் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கண்மாய் பாசனத் துறை அதிகாரிகள் கண்மாய் நீர் வழித்தடங்களை துார்வார வேண்டும். சீமைக் கருவேல மரங்கள் மிகுதியாக வளர்ந்துள்ளன. அவற்றை முற்றிலுமாக அகற்றி பராமரிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.