உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் காம்பவுண்டு சுவரால் விபத்து அபாயம் கண்டுகொள்ளாத அலுவலர்கள்

திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் காம்பவுண்டு சுவரால் விபத்து அபாயம் கண்டுகொள்ளாத அலுவலர்கள்

திருப்புல்லாணி:திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தை சுற்றிலும் நான்கு புறத்திலும் 2009ம் ஆண்டு காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யூனியன் அலுவலகத்தின் வடக்கு பகுதியில் உள்ள காம்பவுண்டு சுவர் சேதமடைந்து விழுந்தது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் அப்பகுதி முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் தொடர்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் புதியதாக யூனியன் அலுவலகத்திற்கு முன்பு புதியதாக மழைநீர் வெளியே செல்வதற்கான வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. யூனியன் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்புறமுள்ள காம்பவுண்டு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் உள்ளதால் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இடிபாடுகளுடன் உள்ள சுவற்றால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே புதிய திட்டத்திற்கு ஆர்வம் காட்டும் யூனியன் அலுவலர்கள் சேதமடைந்த காம்பவுண்டு சுவரை சீரமைத்து பணிகளை செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ