உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல ஆண்டுகளாக சேதமடைந்த சடைமுனியன் வலசை சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கீழக்கரை: ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடைமுனியன் வலசையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ள தார் சாலையால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஏர்வாடி தர்கா பின்புறம் உள்ள கடற்கரை கிராமமாக சடை முனியன் வலசை உள்ளது. இங்கு 2 கி.மீ., க்கு சேதமடைந்த தார் ரோட்டில் பொதுமக்கள், மீனவர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சடைமுனியன் வலசை கிராம மக்கள் கூறியதாவது: 2 கி.மீ.,க்கு தார் ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு செய்திருந்தோம். இதனடிப்படையில் கடலாடி யூனியன் அதிகாரிகள் போராட்டம் ஏதும் செய்ய வேண்டாம். உடனடியாக நாங்கள் அதற்கான நடவடிக்கை எடுப்போம் என உத்தரவாதம் அளித்தனர். தற்போது பல மதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இன்றி சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை