உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மல்லல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது வரை பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.மல்லல் ஊராட்சியில் கண்மாய் கரையோரம் தெற்கு மல்லல் பகுதியில் பி.எம்.ஏ.ஜி.ஒய்., 2022 ஆண்டிற்கான திட்ட நிதியின்படி 10 ஆயிரம் லி., குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஓராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றாமல் காட்சி பொருளாக உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.தெற்கு மல்லல் கிராம பொதுமக்கள் கூறியதாவது:தெற்கு மல்லல் கிராமத்தில் 3000த்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியை சுற்றிலும் ரூ.55 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் கம்பி வேலி அமைத்துள்ளனர். நீர் சேமிப்பு பொது உறிஞ்சி குழி ரூ.14,500 திட்ட மதிப்பீட்டிலும் தற்சமயம் அமைத்துள்ளனர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் தண்ணீர் ஏற்றாத இடத்திற்கு உறிஞ்சி குழி திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை.எனவே திருப்புல்லாணி யூனியன் அலுவலர்கள் இடத்தை பார்வையிட்டு காட்சி பொருளாக தண்ணீர் ஏற்றாமல் இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உரிய முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி